Wednesday, February 10, 2010

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை? (இரண்டாம் இணைப்பு



யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் நேற்றையதினம் இருபாலை குளத்தில் சடலங்களாக மிதக்கக் கண்டெடுக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே. முதலாம் வருட மாணவர்களான இவர்கள் இருவரும் தற்கொலை செய்துள்ளதாகவே செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்நிலையில், இது கொலையாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் இப்போது வலுத்து வருகின்றது. ஏனெனில் இறந்த மாணவரான விக்டர் அருள்தாஸ் வன்னியில் இருந்த காலத்தில் ராணுவ எறிகணைகளில் சிக்கியதில் அவர் தனது கால்கள் இரண்டையும் இழந்துவிட்டார் என எமக்குக் கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. எனினும் இச்செய்தியை அதிர்வு இன்னமும் உறுதிசெய்ய முடியவில்லை.

எனவே கால்கள் இல்லாத ஒருவர் எவ்வாறு இருபாலை குளப்பகுதிக்குச் சென்றார் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அதோடு விக்டர் அருள்தாஸின் தந்தையார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதாகவும் கிடைத்துள்ளது. எனவேதான் மேற்படி இருவருக்கும் ஆதரவுக்கு ஒருவரும் இல்லை என்றும் கூறமுடியாதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tuesday, February 9, 2010

சரத் பொன்சேகா கைதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம்


நேற்று இரவு முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ராணுவப் போலீசால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து நடத்தும் இந்த போராட்டம் குறித்து இன்று காலை அவர்கள் ஊடகவியலாளர்களையும் சந்திக்கவுள்ளனர்.

இதேவேளை மோசடிகள் மற்றும் பிற ராணுவ குற்றங்களுக்காகவே சரத் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து கொண்டிருப்பதால் விரிவான அறிக்கை பின்னர் வெளிவிடப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத் தலைவர் லக்ஷ்மன் ஹுலுகல்ல, அரச தொலைக்காட்சியொன்றுக்கு பேசியபோது, சரத் பொன்சேகாவை ராணுவ நீதிமன்றில் நிறுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்